அநுரகுமார ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச நிர்வாகத்தை பொறுப்பேற்ற காலம் முதல் அந்நிய நேரடி முதலீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான செலாவணி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி
இதன்படி, கடந்த ஆண்டில் 1.048 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அந்நிய செலாவணி பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது தவிர ஜனாதிபதி பதவி ஏற்ற காலத்தில் இருந்து 152 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகங்கள் தொடர்பான நிர்மாண பணிகள், சுற்றுலாத்துறை மற்றும் டயர் தொழில் போன்றவற்றின் மூலமே பாரிய முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறிப்பாக கிடைக்கப்பெற்ற முதலீடுகளில் 65 சதவீதமானவை சர்வதேச ரீதியான முதலீட்டாளர்களால் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri