பயணிகளால் காப்பாற்றபட்ட சாரதி! தேடி சென்று பேருந்து நடத்துனரை கொடூரமாக தாக்கிய நபர்
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் நடத்துனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இன்று (21) காலை காலியில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்
கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை களுத்துறையில் முந்திச் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், அந்த நேரத்தில் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனரைத் தாக்க முயன்றுள்ளார் ஆனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் தலையீடு காரணமாக அவர் தடுக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காலிக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டபோது, முச்சக்கர வண்டியில் வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் நடத்துனரைத் தாக்கியுள்ளார்.
அந்த நேரத்தில், இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் காயமடைந்த நடத்துனரை பயணிகளுடன் பேருந்தில் இருந்து காலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு, காயமடைந்த நடத்துனரை நோயாளர் காவுகை வண்டியை அழைத்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர் தற்போது காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் வந்த பயணிகள் வேறு ஒரு பேருந்தில் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




