ரணிலின் பாரிய குற்றச்செயலை மறைக்கும் அரசியல்வாதி! பொதுவெளியில் அமைச்சர் அம்பலப்படுத்திய இரகசியங்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது மத்திய வங்கியை கொள்ளை அடித்தது தொடர்பான பாரிய குற்றச்சாட்டு இருப்பதாகவும் அதை பற்றி தெரிந்தாலும் சஜித் எதுவும் கூற மாட்டார் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல ஆட்சி வர வேண்டும்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஐஸ்லாந்தில் தான் ஜனாதிபதியாக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக போவதாக இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் அவர் எங்கே ஜனாதிபதியாக போகிறார் என்று யோசித்த போது தெரியவந்தது அவர் ஐஸ்லாந்தில் தான் ஜனாதிபதியாக போகிறார்.
மக்கள் யாரும் இனிமேல் ராஜபக்சர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள். மக்கள் யாரும் பைத்தியக்காரர்கள் இல்லை.
இந்த ஆட்சியை கவிழ்க்க போவதாக சொல்கிறார்கள். இந்த அநுர அரசாங்கத்தை கவிழ்க்க அதைவிட ஒரு நல்ல ஆட்சி வர வேண்டும்''என அவர் கூறியுள்ளார்.




