கர்நாடகாவில் வன்முறை: மதக்கலவரம் இல்லையென்று மாநில அரசாங்கம் அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவம், மதக்கலவரம் அல்லவென்று கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடகா, நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை சம்பவம்
இதன்போது 20 வியாபாரத்தளங்கள் வரை தீயிடப்பட்டுள்ளதுடன் சம்பவங்கள் தொடர்பில் 53 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இது தற்செயலாக நடந்த சம்பவம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நேற்று(12) இரவு விநாயகர் சிலை ஒன்றை நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றபோதே இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.
எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளது.