இந்தியாவில் சூதாட்டத்துக்காக மனைவியை பந்தயப்பொருளாக அறிவித்த கணவர் கைது
இந்தியாவின் உத்தரபிரதேஸ் மாநிலத்தில் தனது மனைவியை பந்தயப்பொருளாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
சூதாட்டத்துக்கு அடிமையான தனது கணவர், ஏற்கனவே 7 ஏக்கர் காணியை விற்பனை செய்துவிட்டதாகவும், தனது பெறுமதியான நகைகளையும் அவர் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
இறுதியில் சூதாட்டத்தில் வைப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் அவர், தம்மை பந்தயப் பொருளாக பயன்படுத்த முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண் தனது தாயின் வீட்டுக்கு சென்றபோதும், அங்கு வந்த கணவர் மற்றும் அவரின் நண்பர்கள் பெண்ணை கடத்திச்செல்ல முயற்சித்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri