பங்களாதேஷில் வன்முறை: ஷேக் ஹசீனா நாடு திரும்பும் திட்டத்தால் பதற்றம்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆளும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியான உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(29.11.2026) தென் மத்திய பங்களாதேஷில் உள்ள ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்சில், தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் BNP உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷரியத்பூர் மாவட்டத்திலும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
பதற்றம்
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவராக இப்ராஹிம் செபாஹி அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் அவாமி லீக் கட்சி உறுப்பினராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மோதலின்போது இருதரப்பினரும் பெற்றோல் குண்டுகளை வீசியதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவாமி லீக் கட்சி, தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து இரண்டு நாள் நாடளாவிய முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் வீதிகள் மரக்கட்டைகளால் மறிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தீ மூட்டப்பட்டுள்ளன.போராட்டக்காரர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
Starlink சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்திய ஈரான்: கொந்தளித்த எலான் மஸ்க் News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri