ரணிலால் ஏற்பட்ட சிக்கல்.. மகிந்தவிடம் தஞ்சம் புகுந்த மைத்திரிக்கு காத்திருந்த ஏமாற்றம்
2018 ஒக்டோபரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார்.
இந்த விடயம் அக்காலப்பகுதியில் தான் எதிர்பார்த்தது போல வினைத்திறனாக அமையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார், ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் இவ்விடயம் தொடர்பில் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் தீர்மானம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அப்போது அரசாங்கத்திற்குள்ளும், எனக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலும் பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன.

நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு இருக்கவில்லை. மறுபுறம், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கூட ரணில் விக்ரமசிங்கவை நீக்குமாறு என்னிடம் கோரினர்.
அந்தச் சூழ்நிலைகளிலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு வர வேண்டும் என நான் உணர்ந்தேன். நிச்சயமாக விடயங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை” என கூறியுள்ளார்.