வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..
நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிவின் இணைப்பாளர் த.கனகராஜ் இன்று(12) தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்த அறிக்கையில், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு..
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri