மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது - விஜித ஹேரத்
அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தடையுள்ளது. அது சட்டரீதியிலான பிரச்சினையாகும். மாகாண சபை தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென தேல்தல் முறைமாற்றம் மற்றும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய ஒற்றுமை
குறித்த எல்லை நிர்ணய சட்டமூலம் நாடாளுமன்றில் அதிப்படியான வாக்குகளால் தோல்வியடைந்தது. அதனால் மாகாண சபைத் தேர்தலை சீக்கிரம் நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. அதற்கான புதிய சட்ட மூலம் தயாரிக்கப்பட வேண்டும்.
அதற்கு நீண்ட காலம் தேவை. அவை இன்றைய காலத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை இப்போது செய்ய முடியாது என நினைக்கிறேன். நாம் முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை காரணிகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
நாட்டின் தேசிய ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும். பொருளாதார நடுநிலையின்மை மற்றும் வேறுபாடுகளே பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது.
நாட்டில் அசாதாரணங்கள் ஏற்பட்டதாலேயே உள்நாட்டு யுத்தங்கள் ஏற்பட்டன. நாம் பிரிவினை யுத்தம் ஏற்பட்டதற்கான மூலக் காரணங்களை ஆராய்ந்து காரணங்களை கண்டறிந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




