ரணிலின் விளக்கமறியல்.. நீதிமன்றத்திற்கு முன்பாக கடும் பதற்றம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் கடும் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு முன்பாக திரண்டுள்ள அதிகளவான ரணில் ஆதரவாளர்கள் கடும் கூச்சலிட்டு வருவதால் குழப்ப நிலை நீடிக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ரணில் ஆதரவாளர்கள் குழப்பம்
நீண்ட விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ரணில் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போதும் ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுத தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
