கரூர் பிரசாரத்தில் நடந்தது என்ன..! நேரடி சாட்சி வழங்கிய பெண்
கரூரில் நடந்த பிரசாரத்தின் போது யாரோ சிலர் கைகளில் கத்தியால் கிழித்தனர். நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தேன் என்று பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி சாட்சி
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
#WATCH | Tamil Nadu: Members of the eight-member NDA-BJP leaders' delegation interact with people in Karur. On 27th September, a stampede during a public event of TVK (Tamilaga Vettri Kazhagam) chief and actor Vijay claimed 40 lives. pic.twitter.com/Qwz2qCp2Pe
— ANI (@ANI) September 30, 2025
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட குழுவினர் இன்று மக்களைச் சந்தித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போது குறித்த பெண்மணியொருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
எனக்குத் தெரிந்த 4 பேர் கைகளில் கிழிபட்டு படுகாயம் அடைந்து ஜி.எச்.சில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஸ்கூல் பிள்ளைகளில் சிலருக்கு கை உடைந்துள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
எதிர்ப்பக்கத்தில் தான் மரத்தில் ஏறி இருந்தனர். அதிலிருந்து சிலர் கீழே விழுந்தனர். இந்தப் பக்க மரத்திலும் ஏறி இருந்தனர். விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் ஏறி இருந்தனர் என தெரிவித்துள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
