ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை: பிரித்தானியா கடும் கண்டனம்
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் ஈக்வடோர் பகுதியில் காணப்படும் ஒரு வகை விஷத் தவளைகளின் நஞ்சை பயன்படுத்தித் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சைபீரிய சிறையில் நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த ஐந்து ஐரோப்பிய ஆய்வகங்கள், 'எபிபாடிடைன்' என்ற கொடிய நச்சு அவரது உடலில் இருந்ததை உறுதி செய்துள்ளன.
இத்தகைய நச்சுகளைப் பயன்படுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும் நோக்கமும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கூப்பர், இது சர்வதேச ரசாயன ஆயுதக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நடவடிக்கை
ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரித்தானிய தலைவர்கள், இந்த விவகாரத்தில் உருசியாவிற்கு எதிராக ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறிப்பாக, ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் (OPCW) மூலம் ரஷ்யாவை விசாரணைக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நவால்னியின் மரணத்தை "இயற்கையானது" என்று ரஷ்யா மறுத்து வரும் நிலையில், உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்வதே அவரது போராட்டத்திற்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam