ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவலால் சர்ச்சை

Donald Trump United States of America Bill Gates World Epstein Files
By Shadhu Shanker Feb 15, 2026 09:28 PM GMT
Report

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது மிக பிரபலமாகியுள்ள நிலையில் எப்ஸ்டீனின் மரணம் தவறான முடிவெடுத்தால் நிகழ்ந்ததாக தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா

எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா

எப்ஸ்டீன் கோப்புகள் 

கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஓஸ்ட் 10 ஆம் திகதி தனது சிறையில் தனது அறையில் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவலால் சர்ச்சை | Doctor Observed Epstein Autopsy Makes Big Claim

அந்த நேரத்தில் நியூயார்க் நகர முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தூக்கிட்டு தவறான முடிவெடுத்து கொண்டதாக அறிவித்தது. ஆனால் அது தற்கொலையா என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து வருகின்றது எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய காணொளிகள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.

அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

ராஜபக்சர்களின் முகவர்களாக செயற்படும் தேரர்கள்! அடாவடித்தனத்தை கண்டுக்கொள்ளாத பொலிஸார்

ராஜபக்சர்களின் முகவர்களாக செயற்படும் தேரர்கள்! அடாவடித்தனத்தை கண்டுக்கொள்ளாத பொலிஸார்

முக்கியஸ்தர்களின் பெயர்கள்

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவலால் சர்ச்சை | Doctor Observed Epstein Autopsy Makes Big Claim

எனவே எப்ஸ்டீன் உண்மையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வழக்கில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவற்றை மறைக்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் மீண்டும் பரவலாக எழுந்துள்ளது.

இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், எப்ஸ்டீனின் மரணம் தூக்கு போட்டதால் நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன என்று கூறிய அவர், தனது 50 ஆண்டுகால மருத்துவப் பணியில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட எவருடைய கழுத்திலும் இதுபோன்று மூன்று முறிவுகளைத் தான் பார்த்ததே இல்லை என்று பேடன் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி களத்தில் ஜனாதிபதி அநுர

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி களத்தில் ஜனாதிபதி அநுர

 கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள்

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பிரேதப் பரிசோதனையை நேரில் பார்க்காமலேயே இது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகப் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவலால் சர்ச்சை | Doctor Observed Epstein Autopsy Makes Big Claim

2023-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் இருந்த சிறையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை உறுதிப்படுத்தியது.

அவரது அறையில் வழக்கமான சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும் இந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US