ஜோசப் விஜயாகிய நான்..! பதவியேற்பு விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் - நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு
புதிய இணைப்பு
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவியேற்கவுள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை 10 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் விஜய் அனுமதி கோரியுள்ள நிலையில் நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் உடன் புஸ்சி அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ள நிலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தவெக விஜய்க்கு 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்புக்கு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையை பெற தவெக முயற்சித்து வந்த நிலையில், 5 நாள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐயூஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது 120 இடங்களை பெற்று ஆட்சியமைக்க தயாராகி வருகின்றது.
பரபரப்பிற்கு மத்தியில் த.வெ.க வெளியிட்ட காணொளி! பெரும்பான்மை கிடைத்தாலும் விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து சிக்கல்
தமிழக மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பு
இதனைடுத்து ஆளுநரின் அழைப்பிற்கமைய, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், மே 11ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழா தமிழக மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் பணிகள் நடந்தாலும், முதல்வர் நாற்காலியில் அமரப்போகும் விஜய், மிக முக்கியமான முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.முதல்வர் வசம் உள்துறை இருப்பது வழக்கம் என்ற நிலையில், நிதியமைச்சகத்தையும் (Finance Department) தனது நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், வரவு - செலவு கணக்குகளில் எந்தவிதமான கறையும் படிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அமைச்சரவை பெயர் பட்டியல்களை தயாரிக்கும் பணி
இதற்கு மறுபுறும் அமைச்சரவை பெயர் பட்டியல்களை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளதுடன், சிலர் முக்கிய பதவிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே சென்னையில் இருந்து மூன்று முக்கியப் புள்ளிகளுக்கு அமைச்சர் பதவி உறுதியாகியுள்ள நிலையில், சிலருக்கு சபையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பட்டியல் இன்னும் முடிவாகாத நிலையில் சில மோதல்களும் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளையில் தவெக சமர்ப்பித்த ஆதரவுக் கடிதங்களில் மோசடி (forgery) நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால், கடிதங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்க ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார் என்று தெரியவருகின்றது.
இந்த சரிபார்ப்பு செயல்முறை சில காலம் எடுக்கும் என்றும், ஆளுநர் இன்று மாலை கேரளாவுக்கு புறப்பட உள்ளதால், ஆளுநரின் பயணம் ஆட்சி அமைப்பு தொடர்பான முடிவுகளில் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து தாமதங்கள், குழப்பங்கள் காரணமாக "ச. ஜோசப் விஜய் எனும் நான்".. எனக் கூறி விஜய் முதல்வராகப் பதவியேற்பாரா என தவெகவினர் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam