பரபரப்பிற்கு மத்தியில் த.வெ.க வெளியிட்ட காணொளி! பெரும்பான்மை கிடைத்தாலும் விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து சிக்கல்
தவெக மீது அமமுக குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்து 12 மணி நேரமாகியும், விஜய் தரப்பில் இருந்தோ அல்லது தவெக தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எம்எல்ஏ காமராஜ் ஆதரவு அளித்ததாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்
தமிழக சட்டசபைத்தேர்தலில் தவெக வெற்றி
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர கர்லேகர் பெரும்பான்மை எண்ணிக்கை 118 காட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என அறிவித்திருந்தார்.
இதன்போது தவெக தரப்பில் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதங்களில் அமமுக எம்எல்ஏ காமராஜ் அளித்த ஆதரவு கடிதமும் உள்ளடங்கியிருந்தது.
காமராஜ் கொடுத்த கடிதத்தின் நகலை தவெக ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், டிடிவி தினகரன், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். ஆளுநரை சந்தித்து டிடிவி தினகரன் முறைப்பாடு அளித்துள்ளமை தவெகவுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இதன்பின் தவெக தரப்பில் எம்.எல்.ஏ காமராஜ் கடிதத்தில் கையெழுத்திட்டதாக காணொளி வெளியிடப்பட்ட நிலையில் இது தவெகவுக்கு பின்னடைவாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் அரங்கேறி சுமார் 12 மணிக்கு நேரத்திற்கு மேலாகியும், இதுவரை தவெக தலைவர் தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை என்ற அடிப்படையில் ஆளுநரிடம் எம்.எல்.ஏ காமராஜ் அளித்த கடிதத்தின் நகல் சமர்ப்பிக்கப்பட்டதற்கு தவெக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடிதங்களின் உண்மைத்தன்மை
ஆதரவுக் கடிதங்களில் மோசடி (forgery) நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என்று கூறப்படுகின்றது.

கடிதங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பு செயல்முறை சில காலம் எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரத்தை இரத்து செய்ய ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. மிக முக்கியமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை (Party Name & Symbol) பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம். இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.
தமிழகம் எதிர்நோக்கிய மிக முக்கிய அறிவிப்பு! சற்றுமுன் வெளியான விசிகவின் நிலைப்பாடு தொடர்பான அதிரடி அறிவிப்பு
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam