அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு

Vijay Tamil nadu TVK
By Mayuri May 09, 2026 08:44 PM GMT
Report

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெகவின் தலைவர் விஜய் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விஜயின் கைகளில் ஆளுநர் கையளித்துள்ளார். 

இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளைய தினம் பதிவியேற்கும் விஜய் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் தனது கட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதன் முறையாக தேர்தலை சந்தித்து 108 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருந்தது தமிழக வெற்றிக் கழகம்.

இதனை தொடர்ந்து அவரது பதவியேற்பு நிகழ்வை ஆவலோடு தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில் அதில் பெரும்பான்மை இல்லை என்ற சிக்கல் நீடித்து வந்திருந்தது.

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

இவ்வாறான நிலையில் தற்போது 120 இடங்களுடன் ஆளுநரை சந்தித்த நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக உச்சகட்ட கொண்டாட்டத்துடன் நாளை காலை பத்து மணிக்கு பதவியேற்கவுள்ளார் விஜய். 

பதின்மூன்றாம் இணைப்பு

ஆளுநருடனான சந்திப்பை முடித்து வெளியில் வந்தார் தவெக தலைவர் விஜய். 

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர். 

பன்னிரெண்டாம் இணைப்பு

தவெக தலைவர் வழங்கிய பெரும்பான்மை தொடர்பான கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்னும் ஆளுநர் மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் குறித்த அறிவிப்பானது இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பதினொன்றாம் இணைப்பு

தமிழகத்தின் முதலமைச்சராக நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் தவெகவின் தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மற்றும் ஆளுநருடனான சந்திப்பு சுமார் அரை மணி நேரமாக நீடித்து வருகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் கட்சித் தலைவர்களும் ஆளுநருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

பத்தாம் இணைப்பு

நான்காவது முறையாக பெரும்பான்மையுடன் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். 

ஒன்பதாம் இணைப்பு

தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆளுநரின் கேரள விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 6.30 மணியளவில் விஜயை அவர் சந்திக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

விஜயை சந்திக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக முன்னதாக தகவல் வெளியாகியதையடுத்து தவெக ஆதரவாளர்கள் கொந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எட்டாம் இணைப்பு

சற்று முன் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட தவெகவின் தலைவர் விஜய் திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஆளுநர் சந்திப்பிற்கான நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் 118 என்பதை தாண்டி 120 இடங்களை பெற்றுள்ள தவெக மற்றும் ஆளுநர் சந்திப்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும் இரவு ஏழு மணியளவில் ஆளுநர் கேரளம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஏழாம் இணைப்பு

ஐயூஎம்எல்  தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது தவெக 120 இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

ஆறாம் இணைப்பு

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக ஆதரவளித்துள்ளதாக சற்றுமுன் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

இதற்கான கடிதத்தை ஆதவ் அர்ஜுனா ஊடகங்களுக்கு காட்டி வெற்றியென அவர் அறிவித்துள்ளார்.  

திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ஆளுநரை நான்காவது முறையாக சந்திக்க தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதன்மூலம், தவெகவுக்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

ஐந்தாம் இணைப்பு

இன்னும் ஒரு சில நிமிடங்களில் விசிகவின் மிகமுக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் தற்போது விசிக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் விசிக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

நான்காம் இணைப்பு

தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படும் நிலையில் இன்னும் அரை மணித்தியாலத்தில் விசிகவின் மிக முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது. 

இவ்வாறான சூழலில் தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

காலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த த.வெ.க. தலைவர் விஜய் தற்சமயம் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் தனது ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

மூன்றாம் இணைப்பு

நீலாங்கரை இல்லத்திலிருந்து சற்றுமுன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அவர் பட்டினப்பாக்கத்திலுள்ள அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் வருகை தந்து விசேட ஆலோசனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கான பெரும்பான்மையை பெற விசிகவின் முடிவு மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. 

விஜய் முதல்வராக முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்! இழுத்தடிக்கும் விசிக - விளாசித்தள்ளும் தமிழிசை

விஜய் முதல்வராக முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்! இழுத்தடிக்கும் விசிக - விளாசித்தள்ளும் தமிழிசை

இவ்வாறான சூழலில் விசிக தனது முடிவை அறிவிப்பதில் இழுத்தடிப்பு செய்து வருகிறது. 

இவ்வாறான சூழலில் விசிக கட்சி வட்டார தகவல்களின் படி இன்னும் சற்று நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என கூறுகிறது. எனினும் இன்னொரு தரப்பு இன்று மாலை 4 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பெரும்பான்மைக்கான ஆதரவினை வழங்குவதற்கு தாம் எந்த வித நிபந்தனைகளையும் அனுகூலங்களையும் கோரவில்லை எனவும் கட்சி தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு

நேற்றைய தினமே தவெகவிற்கு ஆதரவா இல்லையா என்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திருமாவளவன் இந்த முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சற்று முன்னர் அறிவித்துள்ளார். 

11 மணியளவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலாம் இணைப்பு

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு..

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு..

தொடர்ந்து நான்காவது நாளாக தமிழக அரசியலில் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்னும் சற்று நேரத்தில் விசிகவின், தவெகவிற்கான ஆதரவு தொடர்பான முடிவு வெளியாகவுள்ளது.

இந்த நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை தரவுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மூன்றாவது நாளாக இன்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆளுநர் மாளிகை வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் திரள்வு உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை பெறவில்லை, 108 ஆசனங்களை தவெக கட்சி பெற்றதால் கூட்டணியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

தனித்தனியே பேச்சுவார்த்தை

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர். இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு | Heavy Security At The Vsi Office

எனினும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தன. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது.

சிக்கல் நிலை

வி.சி.க. இன்று (9) முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பதவி விலகினால் தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும்.

பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US