விஜய் முதல்வராக முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்! இழுத்தடிக்கும் விசிக - விளாசித்தள்ளும் தமிழிசை
புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என கூறிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் குழப்ப நிலை தொடர்ந்து வரும் நிலையில் விஜய் பதவியேற்பதில் சிக்கல் நிலை நீடித்து வருகிறது.
இவ்வாறான நிலையிலேயே தமிழிசை சௌந்தரராஜன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மை எண்கள் இல்லாததால் தான் தவெக தலைவர் விஜயை 3 முறை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்லிவிட்டது நீங்கள் எண்ணிக்கையோடு வாருங்கள் நாங்கள் அனுமதி தருகிறோம் என்று, ஆனால் ஒவ்வொருமுறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை.
இவ்வளவு எண்ணிக்கை இருந்தால் தான் தேர்வாக முடியும் என்ற நிலையில், அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் என்பது தவறு. அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது என்றார்.
அத்துடன் முக ஸ்டாலின் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, பின்னால் இருந்து பல முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு முட்டுக்கட்டை
எல்லோரும் வெளியில் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு வெளியில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது.
இரண்டு கம்னியூஸ்ட்டுகளும் நானும் ஒட்டுமொத்தமாக தான் முடிவெடுப்போம் என்று கூறிய திருமாவளவன், இன்று ஏன் தயங்குகிறார், என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.
இப்படி இவர்கள் எல்லோரும் தங்களுடைய சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை பழிசொல்வதில் எந்தவிதத்திலும் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan