இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு..

Vijay Tamil nadu Delhi Thamizhaga Vetri Kazhagam TVK
By Shadhu Shanker May 09, 2026 02:03 AM GMT
Report

டிடிவி தினகரனின் குற்றசாட்டால் இந்த குதிரை பேர குற்றச்சாட்டால், தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சி நடப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை பெறவில்லை, 108 ஆசனங்களை தவெக கட்சி பெற்றதால் கூட்டணியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விஜய்க்கு நேர்ந்த கதியே சிறீதரனுக்கு நேர்ந்தது! கதி கலங்கும் தமிழகம்

விஜய்க்கு நேர்ந்த கதியே சிறீதரனுக்கு நேர்ந்தது! கதி கலங்கும் தமிழகம்

தவெக பெரும்பான்மை

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர்.

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு.. | Horse Trading Complaint 3 Year Presidents Rule

இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. எனினும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.

அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தன. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. வி.சி.க. இன்று(9) முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பதவி விலகினால் தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும்.

நள்ளிரவில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நள்ளிரவில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நள்ளிரவில் பரபரப்பு

பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுனரை நேரில் சந்தித்து பேசினார்.

கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார்.

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு.. | Horse Trading Complaint 3 Year Presidents Rule

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது.

உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டது.

இதனை அறிந்து எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றார். த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி முறைபாடு அளிப்பேன்.

தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார். போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்

விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்

குதிரை பேரத்திற்கு அனுமதி

கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்துள்ளார். இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது என காவல் நிலையத்தில் முறைபாடு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு காணொளி வெளியிட்டு த.வெ.க. பதிலளித்து உள்ளது. டிடிவி தினகரனின் குற்றசாட்டால் இந்த குதிரை பேர குற்றச்சாட்டால், தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சி நடப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு.. | Horse Trading Complaint 3 Year Presidents Rule

ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் என்றார். குதிரை பேரத்திற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்றும் கவர்னர் கூறியிருந்த நிலையில், குதிரை பேர குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

டி.டி.வி. தினகரனின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த எம்.எல்.ஏ.வை குதிரை பேரத்தில் இழுக்க முயற்சித்ததற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட்டால், அது த.வெ.க.வுக்கு எதிராக திரும்பும். இதனை குறிப்பிட்டு கவர்னர் அர்லேகர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுத முடியும். தமிழகத்தில் அசாதாரண சூழல் உள்ளது என்றும், குதிரை பேரம் நடக்கிறது என்றும் கூறி, ஜனாதிபதிக்கு கவர்னர் கடிதம் எழுதும் அதிகாரம் உள்ளது.

எனினும், சுய நினைவுடன் கடிதம் கொடுத்திருக்கிறேன் என எம்.எல்.ஏ. கூறினால், இந்த புகார் பலமற்று போய் விடும். அதனுடன், 3-ல் 2 பங்கு ஆதரவு என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அந்த ஒரேயொரு எம்.எல்.ஏ. த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது 100 சதவீத ஆதரவு என்ற வகையிலேயே இருக்கும். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது.

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..!

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..!

 தமிழகம் டெல்லியின் கட்டுப்பாட்டு

அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஆனால், அந்த எம்.எல்.ஏ. தலைமறைவாகும் பட்சத்தில், இது குதிரை பேரம் என கவர்னர் தரப்பில் வலுவாக கூறுவதற்கான காரணியாக அமைந்து விடும்.

இதனால், தமிழகம் டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழிவகுத்து விடும். அதன்பின்னர் தமிழகத்தில் 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சி  நடைமுறையாவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடும். அந்த ஜனாதிபதி ஆட்சியை 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நீட்டிக்க செய்ய முடியும்.

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு.. | Horse Trading Complaint 3 Year Presidents Rule

அல்லது தேர்தல் நடத்தவும் முடியும். இந்த ஜனாதிபதி ஆட்சியை 6 மாதங்களுக்கு ஒரு முறை நீட்டித்து, 3 ஆண்டுகள் வரை டெல்லியின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டை வைத்திருப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதன்பின்பு, தேர்தல் நடத்தி கொள்ளலாம்.

இதுதவிர, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலக்கெடு 10ஆம் திகதி வரையே உள்ளது. அப்படி நிரூபிக்கப்படாமல் போனால், ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தும் முடிவை ஆளுனர் எடுப்பதற்கான சூழலும் உள்ளது.

அதனால், எப்படி போனாலும் 48 மணிநேர காலஅளவே இன்னும் கட்சிகளின் கைவசம் உள்ளது. அதற்குள் சுமுக தீர்வு ஏற்பட்டால் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும். அப்படி இல்லையென்றால், ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US