41 வீட்டில் அழுகுரல்.. ஆயுத பூஜை கொண்டாடும் தவெக விஜய்!
கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தான் காரணம் எனவும் அவர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் பல்வே தரப்புக்களில் தெரிவிக்கப்பட்டது.
கடும் விமர்சனங்கள்..
இந்நிலையில், தற்போது பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி வாகனத்திற்கு ஆயுத பூஜை நடத்தப்பட்டிருப்பது இந்திய அரசியல் பரப்பில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அதாவது, 41 பேரின் உயிர் பறிபோன பின்னும் அந்த சோகத்தை பொருட்படுத்தாது விஜய் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது முறையற்றது என விமர்சிக்கப்படுகின்றது.
அத்துடன், தனது பேரணியில் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது, தனது ஆதரவாளர்கள் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற மனிநிலை தவெக தலைவரை பாதிக்கவில்லை என பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



