காசாவுக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்
காசாவுக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற புளுகு என்ற அமைப்பின் படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேலிய கடற்படையினர், அதில் பயணித்த ஸ்வீடனின்; காலநிலை பிரசாரகர் கிரேட்டா துன்பெர்க் உட்பட ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், தடுத்து நிறுத்தப்பட்டுள்ள படகுகள், பாதுகாப்பாக உள்ளாகவும்,அவற்றில் இருந்த பொருட்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றப்படுவதாகவும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த படகுகள், தீவிரமான போர் மண்டலத்தை நெருங்கி வருவதால், அவற்றின் பாதையை மாற்றுமாக கேட்டுக்கொண்டதாகவும் இஸ்ரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமானது..
எனினும், இந்த இடைமறிப்பை, "சட்டவிரோதமானது" என்றும் "தற்காப்பு நடவடிக்கை அல்ல" என்றும் வெட்கக்கேடான செயல்" என்றும் புளுகு விபரித்துள்ளது.

இஸ்ரேலிய கடற்படை கப்பல் ஒன்று "வேண்டுமென்றே தமது படகு ஒன்றுடன் கடலில் மோதியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
"காசா பட்டினியால் வாடுவதையும் தனிமைப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய ஆக்கிரமிப்பாளர் எந்த அளவிற்குச் செல்வார் என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துவதாக புளுகு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காசாவுக்கு படகுகள் மூலம் உதவி வழங்க ஆர்வலர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri