விஜய் கைது செய்யப்படுவாரா! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதில்: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்பு
தமிழ்நாடு-கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசாரணைகள்
இதன்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விசாரணைகள் நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணையில் உண்மை வெளிவரும். அப்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் நோக்கத்துடன் எதையும் சொல்ல தான் விரும்பவில்லை எனவும் இந்த துயர சம்பவத்திற்கான காரணம் விரைவில் விசாரணையூடாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஜய்க்கு எதிராக தமிழகத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த துண்டுபிரசுரத்தில்,''தமிழக அரசே! 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்.” என்று எழுதப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




