கல்விப் பணிப்பாளர் வெளியேறக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
புதிதாகக் கடமையேற்ற யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக சிவசேனை அமைப்பினரால் இன்று ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்று, பொறுப்பேற்ற முதற் தினத்திலேயே வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீ அவர்களை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புக்கள் சேர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"இந்து பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்துவ பூமியாக்காதே, தமிழர் கல்விப் பண்பாட்டினை அழிக்காதே, வலயப் பணிப்பாளரின் மதவெறி செயற் பாட்டினை கண்டிக்கின்றோம், உடலின் உயிரான சைவத்தினை அழிப்பது தமிழன அழிப்பே, தமிழ் மண்ணின் தமிழ் கடவுளை அகற்றும் துணிவின் பின்புலம் யார்?
எதிர்ப்பு போராட்டம்
தமிழன விரோதியே வலயத்தினை விட்டுபோ" என்ற வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ
தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |