இலங்கையை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதி
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம், சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இவர் இந்த அரசமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அரசமுறைப் பயணம்
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம், அவருடன் வந்த தூதரகக் குழுவினருடன் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, பிரதமர் ஹரினி அமரசூரியவால் வரவேற்கப்பட்டார்.

இதன்போது, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பட்டபெண்டி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் உடன் இருந்தனர்.
வியட்நாம் அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அமைச்சர்களும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி டோ லாமுடன் இப்பயணத்தில் இணைந்துள்ளனர்.


