பதவியேற்பதற்கு முன்பே தவெக தலைவரை சூழ்ந்துள்ள நெருக்கடி! விஜய் கூறியது இதுதான்..
விஜய் ஆட்சி அமைக்கும் முன்பே பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில், "உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு பழகியதுதான் என விஜய் கூறியதாக தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் வீழ்த்தி விஜய்யின் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
நிரூபிக்க தவறிய பெரும்பான்மை - ஒத்திவைக்கப்பட்ட தவெக தலைவர் விஜயின் பதவியேற்பு.! குழப்பத்தில் தமிழக அரசியல்
பதவியேற்பதற்கு முன்பே நெருக்கடி
இந்தநிலையில், ஆட்சியமைக்க 118 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் விஜய் எப்போது ஆட்சி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவிவருகின்றது.
தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாலும், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் 112 ஆக மட்டுமே பலம் உள்ளது.

ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால் தவெகவினர் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நேரடியாக சென்று தவெக நிர்வாகிகள் ஆதரவு கேட்க தொடங்கியுள்ளனர்.
இன்னொருபுறம் அதிமுக - திமுக கூட்டணி அமைக்க போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது ஒரு புறம் தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாகனங்களை மீளப்பெறுமாறு அவர் குறிப்பிட்டுள்ளாார்.
இன்றையதினம்(7) பதவியேற்க இருந்தநிலையில், பதவியேற்க ஆளுநர் அழைக்காதது என பதவியேற்பதற்கு முன்பே நெருக்கடிகள் விஜய்யை சூழ்ந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில், "உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு பழகிடுச்சி.. என விஜய் தன்னிடம் கூறியதாக அருண் ராஜ் கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், இப்போது மட்டுமல்ல.. எப்போதுமே தமிழக வெற்றிக் கழகம் மீதும், தவெக தலைவர் விஜய் மீதும் பல்வேறு திட்டமிட்ட சதிகள் நடந்தது என்பது ஊருக்கே தெரியும்.

அதையும் மீறி தான் நாங்கள், தவெக ஆட்சிக்கு வந்து இருக்கிறது. எனவே எல்லாத்தையும் பொறுமையா பாருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.. நீதி வெல்லும்.
எங்க தலைவர் கூட நேற்று என்னிடம் சொன்னார்.. உங்களுக்குலாம் இது புதுசா இருக்கலாம்.. எனக்கு இது பழகிடுச்சி.. என விஜய் தன்னிடம் பேசினார்.
பாத்துக்கலாம் என சொன்னார். இதை தள்ளித்தான் போட முடியும். ஒரு சட்டப்பூர்வமான ஒரு விஷயத்தை கொஞ்ச நாள் தள்ளித்தான் போட முடியுமே தவிர வேறு ஒன்னும் செய்ய முடியாது.. நீதி கண்டிப்பா வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்.