இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய சேவை
PayPal சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப பணிகள் மற்றும் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சேவை இலங்கையில் நிறுவப்படுவது, இலங்கை டிஜிட்டல் தொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் சுயதொழில் வல்லுநர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சரியான முன்னேற்றமாக இருக்கும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..! திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்
பேபால் சேவை விரைவில்
இதன் மூலம் உலக சந்தைக்கு சேவைகளை வழங்கும் இலங்கை சுயதொழில் வல்லுநர்கள், தங்கள் வருமானத்தை நேரடியாகவும், பாதுகாப்பாகவும், எளிதாகவும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இருந்த தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாட்டின் பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகள் வழியாக வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிக்கவும் நேரடி பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களின் தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்யும் வாய்ப்பை நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், இலங்கையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதிலும், நிதி தொழில்நுட்ப (FinTech) துறையில் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri