விஜயின் அரசியல் களத்தில் குதித்த அமித்ஷாவின் அதிரடி நகர்வு - தீவிரமடையும் தமிழக அரசியல் பதற்றம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK), 118 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் 10 இடங்கள் தேவைப்பட்டன.
காங்கிரஸின் ஐந்து இடங்களையும் சேர்த்தால், விஜய் வென்ற இரண்டு இடங்களில் ஒன்றை நீக்கிய பின், இடங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.
இதனால், இறுதி இலக்கை அடைய தவெக நிரப்ப வேண்டிய இடங்களின் இடைவெளி ஆறாக உள்ளது.
அவையில் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பதே அடுத்த கட்டமாகும். அதிமுக- திமுக கூட்டணி இணையும் என்று ஒரு தகவலும் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், அதிமுக- திமுக கூட்டணி இணையுமா? இணைந்தால் விஜயின் எதிர்காலம் தொடர்பில் சட்டத்தரணி ம.ஜோன்சன் எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..