திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு
திருகோணமலை- வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெருகல் - மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணம் தொடர்பில்லான விசாரணை
பனைமரத்தில் ஏறி பனை ஓலை வெட்டியபோது அதில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியதாகவும், இதன் பின்னர் சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

இதன் பின்னர் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு வாழைச்சேனை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.
மரணம் தொடர்பில்லான விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23