வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற அருண் கேமச்சந்திர தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, வெருகல் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், குறைபாடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
முக்கிய விடயங்கள்
குறிப்பாக யானை - மனித மோதல், தொல்பொருள் திணைக்களம் ஊடான மக்கள் காணி அபகரிப்பு என பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும், மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் மொழி இனமத வேறுபாடின்றி தொல்பொருள் பிரச்சினையும் இங்கு இருக்க கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் எடுத்துரைத்துள்ளார்.
இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் , துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |