அம்பாறையில் காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை
அம்பாறை (Ampara) - பொத்துவில் - விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காட்டு யானை உட்பட சில யானைகள் அந்தப் பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை
குறித்த யானையானது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan