போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெருகல் பிரதேச செயலாளர்

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Rusath Mar 24, 2024 10:33 PM GMT
Report

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் அநியாயங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தெரிவித்துள்ளார்.

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் வெருகல் பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்

மேலும் உரையாற்றிய அவர்,

“வெருகல் பிரதேசத்திலிருந்து பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்  நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முன்னேறத் துடிக்கின்ற எதிர்காலத் தலைவர்களான சிறுவர் சிறுமியரை எதிர்காலத்தின் கல்வியாளர்களாக அதிகாரிகளாக அலுவலர்களாக உருவாக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெருகல் பிரதேச செயலாளர் | Verugal Divisional Secretary Ma Anas Speech Trinco

இதற்குத் தடையாக உள்ள அத்தனை காரணிகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். எல்லாக் காலமும் வேறு பிரதேசங்களிலிருந்து வந்து வெருகல் பிரதேசத்திற்குச் சேவை செய்யும் அதிகாரிகளை இந்த ஊர் தொடர்ந்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து கொள்வதற்காக இப்பொழுதிருந்தே இந்தப் பிரதேச மக்கள் மும்முரமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெருகல் பிரதேச செயலாளர் | Verugal Divisional Secretary Ma Anas Speech Trinco

அத்துடன் இந்நிகழ்வில் பிரதேசப் பெண்களால் அப்பிரதேசத்திலுள்ள ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் தேவைகள் குறித்து பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் “அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, பிரதேச மக்களுக்கு மூவேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை, போஷாக்குக் குறைபாடு, தொழிலிழப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணம் நீர்க்கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த முடியாத நிலைமை, பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்யாது இடை விலகல், இளவயதுத் திருமணம், வீட்டு வன்முறைகள் சிறுமிகளும் பெண்களும் வன்முறைகள் ” உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் கடுமையாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெருகல் பிரதேச செயலாளர் | Verugal Divisional Secretary Ma Anas Speech Trinco

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு பின்தங்கிய சூழ்நிலைகளுக்கும் மத்தியில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து படித்து முன்னேறி உயர் நிலையை அடைந்து கொண்ட மகளிரும் அயற் பிரதேசங்களில் இருந்து வெருகல் பிரதேசத்தில் கடமை புரியும் பதவியிலுள்ள பெண்களும் இன்னும் பல முன்னோடிப் பெண்களும் சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க மகளிர்களாக மேடையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெருகல் பிரதேச செயலாளர் | Verugal Divisional Secretary Ma Anas Speech Trinco

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் சாமரி விஜேசிங்ஹ வெருகல் பிரதேச சபைச் செயலாளர் சுஜாதா வரதகுமார், வெருகல் நீர் வழங்கல் அதிகாரசபை பொறுப்பதிகாரி தயானந்தி நிறோஷா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எஸ் பானு, உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களான பொன்னுத்துரை சற்சிவானந்தம் ஜெயவீரசிங்கம் தவமுரளி பயனாளிகளான கிராம மட்ட கூட்டுறவு அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

இலங்கையில் இருந்து விரைவில் இரண்டு உயர்மட்ட அரச பயணங்கள்

இலங்கையில் இருந்து விரைவில் இரண்டு உயர்மட்ட அரச பயணங்கள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US