வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
தட்சண கைலாயம் எனப் போற்றப்படும் திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி திருக்கோவிலின் வருடாந்த பிரமோற்சவத்தின் 19ஆம் நாள் தீர்த்தோற்சவம் இன்று (30.09.2026) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், காலை தீ மிதிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து, வெருகல் மகாவலிக்கரையில் சித்திரவேலாயுத சுவாமியின் தீர்த்த உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
புனித தீர்த்த நீராடல்

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு, தீர்த்தத்தில் புனித நீராடி இறையருள் பெற்றனர்.
வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி திருக்கோவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பெற்ற இத்தீர்த்தோற்சவம், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” எனும் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... Cineulagam