அனோஜன் விவகாரத்தில் அநுர தீவிரம் - இன்று வெளியாகும் வரலாற்று தீர்ப்பு!
அனோஜனை காப்பாற்ற இலங்கை அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்காமல், பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டால் மாத்திரமே அவரை ஏதாவது ஒரு வழியில் இந்த வழக்கிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அனோஜன் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்சர்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை தற்போதைய அநுர அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, தமிழரசுக் கட்சியில் தற்போது முக்கிய பொறுப்பில் இருக்கும் சுமந்திரன், கட்சியினர் அனுமதி வழங்கினால் மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என்பது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றுடன்(22) அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நாளை முன்னிட்டு, நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 24 பேருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இவ்வாறான நிலையில், நாட்டில் இடம்பெறும் முக்கிய அரசியல் மற்றும் சமூக விடயங்களை சுவாரஸ்யமாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,