வானில் தென்படவுள்ள அரிய நிகழ்வு
இரவில் வானத்தைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த வாரம் ஒரு சிறப்பு காட்சி ஒன்று காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 25 ஆம் திகதி அதிகாலையில், சுக்கிரன், சனி மற்றும் சந்திரன் வானத்தில் நெருக்கமாகத் தோன்றும், இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அரிய நிகழ்வு
மிக நெருக்கமான இடத்தில், சுக்கிரனும் சந்திரனும் சுமார் நான்கு டிகிரி இடைவெளியில் காட்சியளிப்பதை காணலாம்.
சனியும் சந்திரனும் சுமார் இரண்டு டிகிரி இடைவெளியில் காட்சித்தருவதை பார்க்க முடியும்.
அவற்றைப் பார்க்க தொலைநோக்கி தேவையில்லை, ஆனால் தெளிவான வானம் மற்றும் குறைந்த ஒளி மாசுபாடு உள்ள இடத்தில் இருந்து பார்ப்பது நல்லது.
இலங்கையில், மக்கள் இந்த அரிய நிகழ்வை அதிகாலை 4:00 மணி முதல் பார்க்கலாம். மேலும் அது சூரிய உதயம் வரை தெரியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam
