வத்திக்கான் தூதரகத்தில் பாப்பரசருக்கான இரங்கலைப் பதிவுசெய்த இலங்கைத் தமிழரசுக் கட்சி
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தில் தமது இரங்கலைப் பதிவுசெய்துள்ளனர்.
இன்றையதினம்(23) தூதரகத்திற்கு நேரில் சென்றிருந்த இருவரும், இலங்கைக்கான வத்திக்கான் தூதரான பேராயர் Brain Udagwe ஆண்டகையிடம் தமது அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அஞ்சலிக் குறிப்பேட்டிலும் இரங்கற் குறிப்புகளைப் பதிவிட்டுள்ளனர்.
பாப்பரசருக்கு அஞ்சலி
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏழைகளுக்கான தனது பணிவு மற்றும் அர்ப்பணிப்புக்காக உலகளவில் அறியப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு நேற்று முன்தினம் 21 காலை உயிரிழந்துள்ளார்.
இவருக்கு உலகளாவிய ரீதியில்அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன.
துக்க நாள்
இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்க நாள் அனுஸ்டித்துள்ளனர்.
செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கறுப்பு கொடி கட்டி மற்றும் ஆலய முன்றலில் பாப்பரசரின் இழப்புக்கான பதாகைகள் கட்டி தமது துக்கத்தினை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக ஆலய பங்கு மக்களை கேள்வி கேட்ட போது, கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்த இழப்பினை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் இப்போது ஆயன் இல்லா ஆடுகளை போல உள்ளதாகவும் அடுத்த பாப்பரசரின் தெரிவினை மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம் எனவும் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி: கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
