டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று சிறிது காலத்தில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் துப்பாக்கிசூடு இடம்பெற்றது.
இந்த விடயத்தில் முக்கிய சந்தேக நபரான செவ்வந்தியை தற்போது வரை தேடுகின்றனர்.
அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை தேடினார்கள், அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடினார்கள், அவராகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தார்.
அதன்பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை வெளியிடுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நநிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார், அவரிடமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்டுள்ளார், இவர் முதலில் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது பின்னர் அதி தீவிர சிகிச்சையில் உள்ளார் என்று கூறப்பட்டு இறுதியாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விவகாரமுமே மிகவும் பேசுபொருளாகிய நிலையில் அது அடுத்தகட்ட நிலையை அடையவில்லை. இதேவேளை, பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவர் அவரை 30 நிமிடங்கள் சந்தித்தாகவும், தன்னில் குற்றமில்லையென்று பிள்ளையான் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |