இன்றும் காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாலதக்ஸ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது குறித்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றையதினமும் இவ்வாறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நிலையில், இன்றும் பல்வேறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன.
ம
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri