கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க நடவடிக்கை
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பகிரங்க ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதும் இதுவரை உரிமை கோரப்படாததுமான குறித்த வாகனங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஏலத்தில் விற்பனை
இதன்போது BHR-1323 ,மற்றும் BAF-0683 ஆகிய இலக்கங்களையுடைய மோட்டார்சைக்கிள்களும் LC-5563 டிப்பர் PR-3616 இலக்கமுடைய டிமோ பட்டா வாகனம் என்பன ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதேவேளை ஏல விற்பனைக்கு உட்படுத்தப்பட உள்ள வாகனங்களை உரிமை கோருபவர்கள் யாராவது இருப்பின் ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி வாகனங்களை ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் அவற்றை பார்வையிட முடியும் என்றும் ஏல விற்பனையில் பங்கு பற்றுபவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த கூடிய செல்லுபடியான ஆவணங்களுடன் பிரசன்னமாகி இருக்க வேண்டும் என்றும் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |