இலங்கை - இந்தியா கடற்றொழில் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் கடற்றொழில் படகுகளும் சிறைபிடிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் அவர்களது கடற்றொழில் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
2ஆவது கடிதம்
நாகப்பட்டினம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதியன்று கடற்றொழிலுக்குச் சென்ற 10 பேரையும், 18ஆம் திகதியன்று 18 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்கவேண்டும் என்பதுடன், அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் விடுவிப்பு தொடர்பாக கடந்த 3 நாட்களுக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதும் 2ஆவது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |