புதுக்குடியிருப்பில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகனம் : பொலிஸார் விசாரணை

Sri Lanka Police Mullaitivu Northern Province of Sri Lanka
By Shan Nov 16, 2024 07:35 AM GMT
Report

மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.11.2024) இரவு நடைபெற்றுள்ளது.

தென்னிலங்கை அரசியல்வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழ் மக்கள்

தென்னிலங்கை அரசியல்வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழ் மக்கள்

பொலிஸில் முறைப்பாடு

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

கடந்த மாதம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் இருந்த மாடுகள் திருட்டு போயிருந்தது.

அதேபோல் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் திருட்டு போயிருந்தது.

புதுக்குடியிருப்பில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகனம் : பொலிஸார் விசாரணை | Vehicle Seized By Youths In Puthukkudiyiruppu

இதனையடுத்து குறித்த கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வாகனம் நடமாடுவதை குறித்த கிராம மக்கள் அவதானித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்க முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் வாகன இலக்கத்தினை கண்காணித்து வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், நேற்றையதினம் குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சென்ற நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகனம் : பொலிஸார் விசாரணை | Vehicle Seized By Youths In Puthukkudiyiruppu

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த வாகனத்தையும், சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க விடுக்கப்பட்ட அழைப்பு

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் குறித்து வெளியான தகவல்

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் குறித்து வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US