இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை! அதியுச்சம் தொடும் விலை..
வாகனங்கள் இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகன விலை அதிகரிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை (LC) திறந்துள்ளன.
இறக்குமதியை மீள ஆரம்பிப்பதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப ஒதுக்கீடாகப் பெறப்பட்டாலும், மீதமுள்ள நிதியைக் கையாள்வது இப்போது நிச்சயமற்றதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இறக்குமதிக்குக் கிடைக்குமா, மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமா, அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக விரைவில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
சுமார் 9,000 வாகனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
