வாகன சந்தையில் எதிர்பார்க்கப்படும் விலை உயர்வு
அரசாங்கம் நிபந்தனை விதித்தால். உள்ளூர் வாகனச் சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்படலாம் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், இந்தநிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள வங்கி நாணயக்கடிதங்களை திறந்துள்ளன.
அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள்
இந்தநிலையில், இறக்குமதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதி தொடர்பில் நிச்சயமற்ற நிலையே உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமிட்டபடி இறக்குமதிக்குக் கிடைக்குமா, அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்துவதற்காக விரைவில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
