நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வைத்து பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (Thisakutti Arachchi) கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர், பொருளாதார நெருக்கடி காணப்படும் சந்தர்ப்பத்தில் தமக்கு வாகனங்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதால், வாகனங்களை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாகனங்கள் தேவையில்லை எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைகளை உயர்த்துமாறு பிரதமர் கேட்ட போதிலும் எவரும் கைகளை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது.
எனினும் வாகனங்கள் தேவைப்படுவோர் கைகளை உயர்த்துமாறு கேட்ட போது அனைவரும் கைகளை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கூறியதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam