ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது வளைகுடா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதற்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீதை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்றையதினம்(24.6.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தசந்திப்பின் போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விரிவாக ஆலோசனை
சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை இச்சந்திப்பில் மார்கோ ரூபியோ வலியுறுத்தியதாக அவரது செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா எப்போதும் துணையாக நிற்கும் என்ற தங்களது நாட்டின் பாதுகாப்பு உறுதிப்பாட்டை இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மீண்டும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.