அமெரிக்கா - ஈரான் இடையே நேரடித் தொடர்புச் சேவை
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அண்ட்ராபி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்படும் தவறான புரிதல்களையும் தேவையற்ற மோதல்களையும் தவிர்ப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்புச் சேவை ஒன்றை ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சமரசப் பேச்சுவார்த்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்காக உயர்மட்ட அரசியல் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
பேச்சுவார்த்தை
இந்தக் குழுவிடம் இரு நாடுகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களும் தங்களது அறிக்கைகளைத் தொடர்ந்து சமர்ப்பிப்பார்கள்.

அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டவரைவு மற்றும் லெபனான் அரசு மற்றும் மத்தியஸ்தர்களை உள்ளடக்கிய மோதல் தவிர்ப்புப் பிரிவு ஆகியவற்றை உருவாக்கவும் இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.