இலங்கையில் சொத்து மற்றும் வாகனம் விற்பனை செய்யவுள்ளவர்களுக்கான விசேட அறிவிப்பு
தனிநபர் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ள அறிவிப்பில், ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த சொத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தனது சட்டபூர்வ உடைமையில் வைத்திருந்திருக்க வேண்டும்.
அத்துடன், அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், அந்த விற்பனை தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
சொத்து பரிமாற்றம்
மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துக்களை பரிமாற்றம் செய்வதற்கு எவ்வித வரியும் கிடையாது.

மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யும் போது மட்டுமே வரி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஏப்ரல் 1, 2024 முதல் தனிநபர் வாகனங்களை விற்பனை செய்வதற்கான பழைய வரிமுறை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகனத்தின் வயது, நிலை அல்லது மாதிரி எதுவாக இருந்தாலும், தனிநபர் வாகன விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு இலாபமும் வரிச் சுமையின்றி முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri