பயங்கரவாத சட்டத்தின் கீழ் சலே செய்த கொடுமைகள்! சலேவையும் கோட்டாபயவையும் காப்பாற்ற எடுத்த முக்கிய ஆயுதம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்ற விடயம் தற்போது சுரேஷ் சலேயின் கைதுக்குப் பின்னர் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த காலங்களில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள், இன்று அதே சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தின் மறைந்த பக்கங்கள் மற்றும் அரசியல் தந்திரோபாயங்கள் அம்பலமாகி வருகின்றன.
சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்னர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிகக் கொடூரமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளும், தற்போதைய விசாரணைகளும் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த காலங்களில் இனவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற கோஷங்களை முன்வைத்து தங்களின் அனைத்துக் குற்றங்களையும் மூடிமறைத்த ராஜபக்ச தரப்பினரின் தந்திரோபாயங்கள், தற்போது அம்பலமாகியுள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்விடயங்கள் குறித்து ஆராய்கின்றது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,