இளம் பெண் வைத்தியர் படுகொலை..! பிரதான சூத்திரதாரியின் மனைவி, குழந்தைகள் பரபரப்பு வாக்குமூலம்
தெல்தெனிய பகுதியில் பெண் வைத்தியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் மனைவி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைத்தடி பகுதியில் கைது
யாழ்ப்பாணப்பிரிவு குற்றப் புலனாய்வுப்பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையின் பேரில், சாவகச்சேரி - கைத்தடி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது சந்தேகநபருடன் அவரது மனைவியும், இளம் பிள்ளைகளும் உடன் இருந்த நிலையில், அவர்கள் பொலிஸ் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்த சந்தேகநபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இந்தியாவிற்குத் தப்பிச்செல்ல தயாராகிக்கொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன்போது சந்தேகநபர் முகமூடியும் தலைக்கவசமும் அணிந்த பெண் போலவும், அவரது மனைவியும் முஸ்லிம் பெண் போலவும் வேடமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பெண்ணிடம் இருந்து ஒரு அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, தனது ஏனைய இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதற்காக சரணடைவதற்காகவும் வவுனியாவிலிருந்து குருநாகல் பகுதிக்கு வந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதனையடுத்து சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரின் மனைவி, மகளிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், தனது தந்தை தன்னையும் தனது சகோதரனையும் 21ஆம் திகதியன்று தனது பாட்டி வீட்டில் விட்டுச்சென்றதாக அவர் கூறியுள்ளார்.
சந்தேகநபர் சில நாட்கள் நீர்கொழும்பிலும் சிலாபம் பகுதிகளிலும் மாறுவேடமிட்டு தங்கியிருந்து, சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளம் பெண் வைத்தியரின் சடலம், கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பம்பலப்பிட்டியில் முச்சக்கர வண்டிக்கு தீவைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு - விசாரணையில் வெளியான தகவல்