தெல்தெனிய பெண் படுகொலை விவகாரம்.. யாழில் இருந்து தப்பியோட முயற்சித்த முக்கிய சந்தேகநபர்
தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், பிரதான சந்தேக நபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க, நுவரெலியா பொலிஸாரின் சிறப்பு பொலிஸ் குழு ஒன்று குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கொலையின் முக்கிய சந்தேக நபர், சந்தேகத்திற்குரிய ஓட்டுநரின் நண்பர் என்றும், சந்தேக நபரின் தொலைபேசித் தரவுகளைப் பயன்படுத்தி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்
யாழ்ப்பாணத்தில் கைது
தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக, பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மருத்துவமனையைச் சேர்ந்த இயன்முறை பெண் மருத்துவர் ஒருவரின் சடலம், தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
43 வயதான அவரது காதலன், சடலத்தை காரில் வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் 7 நாட்கள் விரிவான விசாரணையை பொலிஸ் மேற்கொண்டிருந்தது.
தப்பியோட முயற்சி
குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து தொழில்நுட்ப உதவியும் பெறப்பட்டுள்ளது. சந்தேக நபர் வேல்வத்தை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாண பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள் சாவகச்சேரி பகுதியில் சந்தேக நபர் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தை மறித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபருடன் அவரது மனைவியும் குழந்தையும் உடன் இருந்தமை தெரியவந்தது.
சந்தேக நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி ஒரு முஸ்லிம் பெண் போல வேடமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்று, குருநாகலாவுக்குச் சென்று, அங்கு தனது மற்ற இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்ட பின்னர் பொலிஸாரிடம் சரணடையத் தயாராக இருந்ததாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் தனது குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராகி வந்ததாகச் சந்தேகப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.