கொழும்பில் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, வாடகை காரில் தனது வீட்டிற்கு திரும்பிய தொழிலதிபர் ஒருவர் அணிந்திருந்த தங்கக் கைக்காப்பு திருடப்பட்டுள்ளது.
சுமார் 102 இலட்சம் ரூபா பெறுமதியான நகையை திருடிய வாடகை கார் சாரதியை வத்தளை பொலிஸார் கடந்த வார இறுதியில் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவரால் திருடப்பட்ட அந்த தங்கக் கைக்காப்பு நீர்கொழும்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முன்னணி ஹோட்டல்
கடந்த 17ஆம் திகதி மாலை 6.00 மணியளவில், வத்தளை ஹேகித்த பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து இந்த தொழிலதிபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாடகை கார் ஒன்றில் கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு சென்றுள்ளார்.

தொழிலதிபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வேறு ஒரு வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் திருமண வரவேற்பு நிகழ்வில் இருந்துள்ளார்.
மறுநாள் அதிகாலை 1.30 மணியளவில் திருமண நிகழ்வுகள் முடிந்ததும், அவர் ஒரு வாடகை கார் மூலம் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அந்த நேரத்தில் தொழிலதிபர் மதுபோதையில் இருந்ததால், சாரதி அவரது வீட்டிற்கு அருகில் வைத்து அவரது தங்கக் கைக்காப்பைக் கழற்றித் திருடியுள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
மதுபோதையில் வந்த தொழிலதிபர் மாலை 3.30 மணியளவில் பார்த்த போது தனது கைக்காப்பு காணாமல் போயிருப்பதை அறிந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து, குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரோஹண நந்தசிறி வாடகைக்கு பயணிப்பதாக கூறி தந்திரமாக அந்த சாரதியை வத்தளை பகுதிக்கு வரவழைத்து அவரைக் கைது செய்துள்ளார்.
அத்துடன், அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் கைக்காப்பையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி 20 வயதுடைய இளைஞர் என்பதுடன், அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.