வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் உறுதி
ஒரு வருடத்தின் வாகன இறக்குமதிகளின் மொத்த பெறுமதி 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அது நாட்டின் டொலர் கையிருப்பையோ கடன் மீள செலுத்துவதையோ பாதிக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதியானது, நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று பாரிய பற்றாக்குறையை தோற்றுவிக்காது என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் புதிய பெறுமதி
அத்துடன், கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் நிறைவடைந்ததன் பின்னர், வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும் அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவசியமான மீளசெலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரசாங்க வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri